சிலாபம் – இரணவில பிரதேசத்தில் மின்சாரம் தாக்கிய பத்து வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கின் காரணமாக சிறுவனை மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதனையடுத்து உடனடியாக உறவினர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். எனினும், அதற்குள்ளாக சிறுவன் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரணவில பிரதேசத்தைச் சேர்ந்த தில்மிக கீதாஞ்சன எனும் சிறுவனே இவ்வாறு துரதிருஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.






