வவுனியா குருமன்காடு காளி கோவில் வீதி முதலாம் ஒழுங்கையில் இன்று (27.02.2018) மதியம் 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
தாயார் இன்று காலை 8 மணியளவில் வேலைக்குச் சென்ற சமயத்தில் வீட்டில் தனிமையில் கலைச்செல்வன் என்ற 28 வயது இளைஞன் இருந்துள்ளார். மீண்டும் தாயார் 12.30 மணியளவில் வீடு திரும்பிய சமயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அயலவரின் உதவியுடன் சடலம் கீழே இறக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







