கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிள் ஒன்று கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியில் கடந்த 26ம் திகதி இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
தனது மோட்டார் சைக்கிளை குறித்த பகுதியில் நிறுத்தி வைத்துவிட்டு அருகில் இருந்த உணவு விடுதியொன்றுக்கு சென்றதாகவும் பின் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளைக் காணவில்லை எனவும் முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதன் பெறுமதி இரண்டு இலட்சம் ரூபா எனவும் தெரியவந்துள்ளது. இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்