துபாயில் மரணமடைந்த திரைப்பட நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்று அதிகாலையில் மும்பைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ஸ்ரீதேவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதுமட்டுமின்றை மராட்டிய பாஜக அரசால், நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. அவரது உடலில் முவர்ணக் கொடி போர்த்தப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடலை பார்ப்பதற்கு திரைப்பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். அப்போது நடிகை வித்யாபாலன் அவரின் இறப்பை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.
இப்படி திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்காக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த போது, ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் காரில் இருந்து இறங்கியதும் சிரித்தபடி அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் கூறினார்.
அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தைக் கண்டு ஜாக்குலின் பெர்னாண்டசை வறுத்தெடுத்து வருகின்றனர்.







