ஐரோப்பாவை திணறடிக்கும் பனிப்பொழிவு : இதுவரை 24 பேர் பலியான சோகம்!!

486

 
ஐரோப்பாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

போலந்தில் 9 பேரும், பிரான்சில் 4 பேரும், லிதுவேனியாவில் 5 பேரும், செக் குடியரசில் 3 பேரும், ருமேனியாவில் இரண்டு பேரும், இத்தாலியில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களில் பெரும்பான்மையோர் சாலையோரம் வசிப்பவர்கள் என்பதால் அவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றன.

ஸ்பெய்னிலிலுள்ள Bilbao, Barcelona, Santander மற்றும் San Sebastian ஆகிய நகரங்களில் நேற்று கடுமையான பனிப்பொழிவு நிலவியதால் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Catalonia மற்றும் Canary Islands பகுதிகளில் பள்ளிகளுக்கான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பா முழுவதும் அவசர உதவிக் குழுக்களை ஏற்பாடு செய்துள்ள செஞ்சிலுவைச் சங்கம் அக்கம்பக்கத்தவர்கள் மற்றும் உறவினர்களை கவனித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுமார் 60 விமான சேவைகளை British Airways ரத்து செய்துள்ளது. இத்தாலியில் பல பள்ளிகளும் குழந்தைகள் காப்பகங்களும் மூடப்பட்டுள்ளன.

நேபிள்ஸ் இல் விமான நிலையம் மூடப்பட்டது. பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. ஹீட்டர்களின் பயன்பாடு அதிகமானதால், ஐரோப்பாவிற்கு பெருமளவில் எரிவாயு வழங்கும் Gazprom என்னும் ரஷ்யாவின் பிரதான எரிவாயு நிறுவனம் கடந்த ஆறு நாட்களில் வரலாறு காணாத அளவில் 667 மில்லியன் கன மீற்றர்கள் எரிவாயுவை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.