சவுதியில் தடையை மீறி ரகசியமாக பெண்கள் கார்களை ஓட்டிச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபிய சாலைகளில் பெண்கள் கார்கள் உள்ளிட்ட இதர வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீறினால் பொலிசார் மற்றும் மதத்தலைவர்களால் தண்டனை தரப்படும் என மிரட்டல் விடுத்துள்ளனர். அதாவது கார்களை ஓட்டுவதால் பெண்களின் கருப்பை பாதிக்கப்படுவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் அவர்களுக்கு ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் பெண்களுக்கெதிரான இந்த தடையை உடைத்தெறியும் விதமாக நேற்று கடை மற்றும் அலுவலங்களுக்கு கார்களை சுமார் 60 பெண்கள் ஓட்டிச் சென்றுள்ளனர்.
இவர்களே அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு அதிகமாகியுள்ளது.





