2000 ரூபா போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் :கிடைத்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தல்!!

770

2000மாலபே பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 70 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள்கள் பி.677999159 என்ற ஒரே இலக்கங்கள் தொடரில் அச்சாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த இலக்கங்களை கொண்ட இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள்கள் தமது கைகளுக்கு கிடைத்தால் அதனை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸ் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுள்ளது.