ஹொலிவுட் வாய்ப்பை உதறித் தள்ளிய தனுஷ்!!

328

danushதமிழில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்துள்ள நடிகர் தனுசுக்கு தமிழில் மட்டுமின்றி இந்தி திரையுலகிலும் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஆனால் படங்கள் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் நடிகர் தனுஷ்.

தற்போது தமிழில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கும் வேலையில்லா பட்டதாரி, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அனேகன், வெற்றிமாறன் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் என வரிசையாக ஒப்பந்தமாகியிருக்கும் இவருக்கு, ஹொலிவுட்டில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்ததாம். இதுகுறித்து அவர் கூறும்போது..

பிரிட்டன், ஸ்பானிஷ் உள்ளிட்ட பல ஹொலிவுட் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்தன. படத்தின் முழுக் கதையையும் எனக்கு அனுப்பியிருந்தார்கள். ஆனால் அந்த நேரத்தில் இங்கு பல படங்களில் பிசியாக இருந்ததால் அந்த படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

பொலிவுட்டில் அறிமுகமாகிய நேரத்தில் என்னைப் பார்த்து எல்லோரும் சிரித்தார்கள். இந்நிலையில் ஹொலிவுட்டில் நடிக்கப் போகிறேன் என்றால் மேலும் சிரிப்பார்கள். எனக்கே சிரிப்புதான் வருகிறது. ஆனால், எதுவுமே சாத்தியம்தான் எனக்கு. முடியாதது எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.