ஆண் குழந்தைக்கு அப்பாவானார் பரோட்டா சூரி!!

293

Suriவெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டாவை அசால்ட்டாக சாப்பிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியவர் சூரி. இந்த படத்தில் இருந்து இவர் பரோட்டா சூரி என்று அழைக்கப்படுகிறார். அதன்பிறகு இவர் நடித்த பல படங்கள் வெற்றியடைந்ததையடுத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியர்களுள் ஒருவராக இருக்கிறார்.

இவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்ட நிலையில், வெண்ணிலா என்ற மகளும் உள்ளார். இந்நிலையில், இவரது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமானார். நேற்று காலை அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனால், சூரி மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

சூரி தற்போது விஜய் நடிக்கும் ஜில்லா, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.