வவுனியாவில் சாராயக் கடைகளை மூடுமாறு கோரி கண்டனப் போராட்டம்!!

1362

 
சாராயக்கடைகளை மூடுமாறு கோரி கண்டனப் போராட்டம் ஒன்று இன்று (08.03.2018) வியாழக்கிழமை வவுனியா பிரதேச செயலகம் முன்பாக சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் ஒருங்கிணைப்பாளர் ந.தேவகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.

அனைத்துலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு இக்கண்டன போராட்டத்தில் உழைக்கும் பெண்கள் விடுதலை முன்ணணி அமைப்பும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது.

பெண்களின் உடல், உள, சமூக பொருளாதார கட்டமைப்புக்களை சீரழிக்கும் சாராய பார் மற்றும் கள்ளுக்கடைகளை இழுத்து மூடு என்ற பிரதான கோசத்துடன் இக்கண்டன போராட்டம் நடைபெற்றிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் உழைக்கும் பெண்களை நிம்மதியாக வாழ விடு, பெண்களின் வாழ்வுரிமையை சிதைக்கும் சாராயக்கடைகளை இழுத்து மூடு, கிராமங்களில் போதைப்பொருட்களை உடனே கட்டுப்படுத்து, பெண்களுக்கு கடன் திட்டமா தற்கொலை திட்டமா? கேரள மாவா பாக்கை தடை செய் போன்ற பதாதைகளை தாங்கி நின்றனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த காணிகள் மற்றும் விவசாய மறுசீர் அமைப்பை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.