வவுனியாவில் மகளிர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்!!

368


 
மகளிர் தினமான இன்று (08.03) வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 378 ஆவது நாளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

மகளிர் தினத்தை முன்னிட்டும், முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் ஒரு வருட பூர்த்திக்கும் ஆதரவு தெரிவித்தும் இன்று இப் போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தெரிவித்தனர்.பிள்ளைகள் தான் பெற்றோருக்கு சந்தோசம் பிள்ளைகள் இல்லாது நாங்கள் இந்த வீதியோரத்தில் இருக்கின்றோம். எப்போது பிள்ளைகள் எமக்கு கிடைகின்றார்களோ அப்போது தான் எமக்கு மகளிர் தினம் என்பதாக போராட்டத்தில் இருந்த தாய் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இவ் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுடன் மகளிரும் இணைந்து போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.