வவுனியா சேனைப்பிளவு உமையாள் வித்தியாலயத்தின் கல்விக் கண்காட்சி!!

558

 
வவுனியா சேனைப்பிளவு உமையாள் வித்தியாலயத்தின் கல்வி கண்காட்சி நேற்று (08.02.2018) பாடசாலையின் அதிபர் திரு.நிமலன் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதன் அதிதிகளாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட வவுனியா வடக்கு பிரதேச உறுப்பினர்களான சத்தியேந்திரன், பொ.தேவராஜா, வி .யேசுதாகர் ஆகியோரும்

நெடுங்கேணி பிரதேச சபையின் செயலாளர் சத்தியசீலன், வவுனியா வடக்கு வலய பிரதி கல்விப்பணிப்பாளர் மாலதி முகுந்தன், கோட்டக்கல்வி அதிகாரி, பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.