வேலைவாய்பொன்றை தேடிச் சென்ற 28 வயதான பெண்ணை ஏமாற்றி வல்லுறவுக்கு உட்படுத்திய 26 வயதான தோட்ட காவலாளி ஒருவரை சிலாபம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஆராய்ச்சிக்கட்டு பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் தனது கணவருடன் வேலை ஒன்றை தேடிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இறுதியில் தோட்டத்தின் காவல் வேலை ஒன்றை பெற்று தருவதாக கூறி சந்தேக நபர் கணவனையும் மனைவியையும் அழைத்துச் சென்றுள்ளார்.
கணவனை வேறு பணியைச் செய்யுமாறு வீட்டில் இருந்து அவரை வெளியில் அனுப்பி வைத்த சந்தேக நபர் இந்த குற்றச் செயலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்தே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார். சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





