வவுனியாவில் பெற்ற குழந்தையை விற்றுவிட்டு காணவில்லை என நாடகமாடிய தாயார் கைது!!

549

வவுனியா வைத்தியசாலையில் (09.03) நேற்றையதினம் குழந்தை திருட்டுப்போனதாக தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குழந்தை அனுராதபுரத்தில் இன்று (10.03) பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் நேற்று முற்பகல் 11 மணியளவில் 5ஆம் இலக்க விடுதில் கடந்த 7ஆம் திகதி இரவு பிறந்த ஆண் குழந்தை ஒன்றினை வைத்தியசாலை விடுதியில் தனக்குப் பக்கத்தில் நின்றிருந்த இளம் கர்ப்பிணி பெண் ஒருவரிடம் கொடுத்துவிட்டு குழந்தையின் தாயார் குளியலறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை வாங்கிய நபரையும் தனது குழந்தையையும் காணவில்லை என்று வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் தாயார் ஒருவரால் முறைப்பாடு மேற்கொண்டிருந்தார்.

குறித்த குழந்தையின் தாயார் பொகஸ்வெவே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என்பதுடன் திருடப்பட்ட குழந்தை அவரின் 4ஆவது ஆண் குழந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் குழந்தையை பெற்ற தாயாரே தனது குழந்தையை விற்றுவிட்டு திருட்டு போய்விட்டதாக நாடகமாடியுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளதுடன் குறித்த குழந்தையின் தாயாரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அனுராதபுரத்தில் மீட்கப்பட்ட குழந்தையுடன் குழந்தையை வாங்கியவர் என சந்தேகிக்கபடும் பெண் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன் இருவரையும் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.