புலிகளுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட கனடியத் தமிழருக்கு 2வருட சிறைத்தண்டனை!!

340

waterloo_sureshஅமெரிக்காவில் 2006ம் ஆண்டு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழரான சுரேஸ் சிறீஸ்கந்தராசாவுக்கு 2வருட சிறைத்தண்டனை விதித்து நேற்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி குற்றம் சுமத்தப்பட்டுள்ள வோட்டர்லூ சுரேஸ் என்று அழைக்கப்படும் 33 வயதான சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் வழங்கியுள்ளது.

வோட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பொறியியல்துறை மாணவரான சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா 2006ம் ஆண்டு கனடாவில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராசாவும் மேலும் மூவரும் விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்தனர் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உதவினர் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இந்தநிலையில் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட சுரேஸ் அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீடு 2012ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.

இதன்போது தாம் விடுதலைப் புலிகளுக்காக வானூதி உபகரணகள், நீர்மூழ்கி கப்பல்கள், இரவு நேர வெளிச்சம் பாய்ச்சி மற்றும் தொலைத்தொடர்புகள் குறித்த ஆராய்ச்சிகளில் உதவியதாக சுரேஸ் நீதிமன்றத்தில் குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.