பரந்தனில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனமொன்று, பரந்தன் – பூநகரி வீதியில் வைத்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், வாகனம் தடம்புரண்டதால் விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட 4 பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக வேகத்தினால் விபத்து இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிப்பதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.








