மாலபே பிரதேசத்தில் ஏழு மில்லியன் பெறுமதியான போலி 2000 ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அடுத்த மாதம் 7ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட மூன்றாம் சந்தேகநபரிடமிருந்து 2000 ரூபா பெறுமதியான 20 போலி நாயணத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சந்தேகநபர் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடமிருந்து போலி நாணயத்தாள்களை பெற்றுக் கொண்ட ஏனைய நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.





