சமூக வலையமைப்புக்கள் மீதான தடையை நீக்குமாறு அவுஸ்திரேலியா கோரிக்கை!!

490

சமூக ஊடக வலையமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டுமென அவுஸ்திரேலியா கோரியுள்ளது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹட்சிசன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

நாட்டில் சமூக ஊடக வலையமைப்புக்கள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கான காலம் இதுவெனத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து சமூக ஊடக வலையமைப்புக்கள் தடை செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை, சமூக ஊடக வலையமைப்புக்கள் மீதான தடைக்கு அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப்பும் எதிர்ப்பை வெளியிட்டியிருந்தனர்.