முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு இன்று சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!

601

LTTEதேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை மூலம் தொழிற் பயிற்சிகளை முடித்துக் கொண்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று அமைச்சர் டளஸ் அழகப் பெருமவின் தலைமையில் கட்டுநாயக்காவில் நடைபெற்றது.

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கும் செயற்திட்டம் பொலனறுவை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்றதுடன் இங்கு பயிற்சி பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் 29 பேருக்கு இன்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இன்று காலை 10.00 மணிக்கு கட்டுநாயக்கா
பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் அமைச்சர் டளஸ் அழகப்பெரும பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு முன்னாள் புலி உறுப்பினர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.

இதேவேளை கட்டுநாயக்காவில் 330 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பயிற்சி மாணவர்களுக்கான விடுதியையும் அமைச்சர் இதன்போது திறந்து வைத்தார்.