வவுனியாவில் மதுபோதையில் ஆண்களுடன் பெண்களும் அட்டகாசம்!!

922

வவுனியா குடியிருப்பு பகுதியிலுள்ள குளக்கட்டில் நேற்று(13.03.2018) இரவு ஆண்களுடன் பெண்களும் இணைந்து மது அருந்திய போது அங்கு சென்ற இளைஞர்கள் அவர்களை அவ்விடத்திலிருந்து துரத்தியடித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா குடியிருப்பு குளக்கட்டுப்பகுதியிலிருந்து மூன்று இளைஞர்களுடன் சேர்ந்திருந்து மூன்று பெண்களும் மது அருந்திக்கொண்டு இருந்தபோது அவ்வீதியூடாகச் சென்ற இளைஞர்கள் சிலர் இதனை அவதானித்துள்ளதுடன் அவர்களிடம் யார் நீங்கள் ஏன் இவ்வாறு ஆலயப்பகுதியில் சீர்கேடான முறையில் ஈடுபடுகின்றீர்கள் என கேட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்களுடன் இருந்த இளைஞர்கள் கேள்வி கேட்ட இளைஞர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன் இளைஞர்கள், பெண்களையும் அவ்விடத்திலிருந்து மது அருந்திய இளைஞர்களையும் விரட்டியடித்துள்ளனர்.