வவுனியாவில் இடியுடன் கூடிய மழை : மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு!!

829

 
வவுனியாவில் இன்று(16.03.2018) பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

காலை முதல் கடும் வெப்ப நிலை காணப்பட்ட போதிலும் மாலை வேளைகளில் கடந்த இரண்டு தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது.

இதனால் மின்சாரம் சற்று நேரம் தடைப்பட்டது. இன்று மாலை பெய்த கடும் மழையுடன் இடி மின்னல் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது.

வவுனியா நகரம், பூந்தோட்டம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற வவுனியாவில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.