ரயில் கட்டணம் 15 வீதத்தினால் அதிகரிப்பு!!

934

ரயில் கட்டணம் நூற்றுக்கு 15 வீதத்தில் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் மாதம் முதல் இந்த அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் அதற்கான வர்த்தமானி வெளியாகும் என திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டில் இருந்து இதுவரையிலான காலப்பகுதியினுள் ரயில் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

ரயிலுக்கான செலவு அதிகரித்துள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.