டுபாயில் இருந்து போதைப் பொருள் கடத்திய இலங்கையர் கைது!!

611

arrest1டுபாயில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 09 மல்லிகாராம பகுதியைச் சேர்ந்த 59 வயது நபரே கைது செய்யப்பட்துடன் அவரிடம் இருந்து 482 கிராம் அபின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் நீர்கொழும்பு நீதிமன்றில் நேற்று ஆஜர் செய்யப்பட்டார்.