வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட 214 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கி வைப்பு!!

595

 
வவுனியா விவசாய திணைக்களத்தில் ஏற்பாட்டில் நேற்று (16.03.2018) காலை 10 மணியளவில் தாண்டிக்குளம் வீதியில் அமைந்துள்ள விவசாய உற்பத்தி பண்ணையில் தெரிவு செய்யப்பட்ட 214 பயனாளிகளுக்கு 13.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிட்டில் உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியாவில் நான்கு பிரதேச செயலகங்களில் பெண் தலைமைத்துவ குடும்பத்தினை சேர்ந்தவர்கள், போரால் பாதிப்படைந்தவர்கள், பெற்றோரை இழந்த குடும்பங்கள் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 214 பயனாளிகளுக்கு 13.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிட்டில் மோட்டர் பைப், தூவல் நீர்ப்பாசன தொகுதி, துளிர் நீர்ப்பாசன தொகுதி , மண்ணெண்னையில் இயங்கும் மோட்டார் போன்ற பல பொருட்கள் வழங்கப்பட்டன

இந் நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் , வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம் , ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, வடமாகாண விவசாய அமைச்சரின் செயலாளர், விவசாய பணிப்பாளர், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர். ​