ஷீரடி சாய்பாபாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது!!

1719

babaபுட்டபர்த்தி பாபாவின் கதையை படமாக்கும் முனைப்புடன் ஆந்திராவில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். புட்டபர்த்தி பாபாவின் பகட்டுக்கு ஏற்றவகையில் பிரமாண்டமாக படத்தை தயா‌ரிப்பதாக திட்டம்.

இந்நிலையில் ஷீரடி சாய்பாபாவின் வாழ்க்கையை பாஸ்கர் பாபா என்பவர் படமாக எடுக்கிறார். ஷீரடி சாய்பாபாவின் வாழ்க்கை ஏற்கனவே படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

அதில் இடம் பெறாத பாபாவின் முக்கிய வாழ்வியல் சம்பவங்களை பாஸ்கர் பாபா தனது படத்தில் சொல்லவிருக்கிறாராம். படத்துக்கு ஷீரடி ஜெய் ஸ்ரீராம் என பெயர் வைத்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது