செவ்வாய் கிரக உச்சியில் கால் பதித்தது கியூரியா சிட்டி விண்கலம்!!

329

NASA_Mars_Roverசெவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மையம் அங்கு கியூரியா சிட்டி ஆய்வக விண்கலத்தை அனுப்பியுள்ளது.

அது செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு மற்றும் மலையை போட்டோ எடுத்து அனுப்பி வைத்தது. காற்றின் வேகம், தட்ப வெப்ப நிலை போன்றவற்றை அளவீடு செய்து தகவல்களை அனுப்பி வருகிறது.

கியூரியா சிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தின் நிலப் பரப்பில் ஆங்காங்கே நகர்ந்து மாதிரிகளை சேகரித்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய் கிரகத்தில் உள்ள கொலந்தர் என்ற பெரிய மலையின் வடமேற்கு பகுதியில் ஏறி அங்குள்ள மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து வருகிறது.

15 முதல் 20 டிகிரி செங்குத்தான உயரத்தில் 2 முதல் 6 மீட்டர் வரை ஏறியுள்ளது. அது 40 மீட்டர் உயரம் ஏறி அங்குள்ள மண் மற்றும் பாறைகளை வெட்டி எடுத்து ஆராய்ச்சி மேற்கொள்ளும்.

கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் சுமார் 10 ஆண்டுகள் தங்கியிருந்து ஆராய்ச்சி நடத்துகிறது.