கிரிக்கெட் பந்து தலையில் பட்டதால் தென் ஆபிரிக்கா வீரர் டேரின் ரேண்டல்(32) பரிதாபமாக உயிரிழந்தார்.
தென் ஆபிரிக்காவின் அலைஸ் நகரில் பார்டர் கிரிக்கெட் சபையின் ஆதரவுடன் ஓல்டு செல்போர்னியான்ஸ் அணிக்கும், ஃபோர்ட் ஹேர் பல்கலைக்கழக அணிக்கும் இடையே லீக் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் களத்தடுப்பின் போது துடுப்பாட்ட வீரர் அடித்த பந்து டேரின் ரேண்டல் தலையில்பட்டது. இதில் அவர் மயக்கமடைந்து விழவே உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அதற்குள்ளாகவே அவர் இறந்துவிட்டார் மறைந்த ரேண்டலுக்கு அவரது தாயார் மட்டுமே உள்ளார். விரைவில் அவருக்கு திருமணம் நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.





