வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் வித்தக விநாயகர் ஆலயம் புனர்நிர்மாணம்!!

609

 
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் ஸ்ரீ இந்து வித்தக விநாயகர் ஆலயம் புனர்நிர்மாணம் செய்து பாடசாலை சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (19.03) கல்லூரியின் அதிபர் த. பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனின் பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியத்தின் கீழ் இவ் ஆலயம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் புதிதாக பால முருகன் சிலை இ.சிவசுப்பிரமணியம், சு.சுந்தரமூர்த்தி ஆகியோரின் உபயத்தில் இந்துக்கல்லூரியில் பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் வவுனியா நகரசபை உப நகரபிதா சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.