வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி பாவனைக்கு கையளிப்பு!!

847

 
வடக்கு மாகாண சபை உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தின் மாகாண நிதி ஒதுக்கீட்டில் வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்திற்கு பொருத்தப்பட்ட குடிநீர்வடிகட்டும் இயந்திரத்தொகுதி இன்று (19.03.2018) மாணவர்களின் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துவரும் சிறுநீரக நோயின் தாக்கத்தை கவனத்தில்கொண்டு சிறுவயதிலிருந்தே மாணவர்கள் சுத்தமான குடிநீரை பருகும் நோக்குடன் இந்த குடிநீர்வடிகட்டும் இயந்திரத்தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு இதே பாடசாலைக்கு நிழற்பிரதி இயந்திரம் ஒன்று முன்னாள் சுகாதார அமைச்சரால் வழங்கப்பட்டபோது பாடசாலை அதிபரால் குடிநீர்வடிகட்டும் இயந்தரமொன்றின் தேவைபற்றி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.