அனுஷ்கா எனக்கு தங்கை : இயக்குனர் செல்வராகவன்!!

365

anuskaசெல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள படம் இரண்டாம் உலகம். இப்படம் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த மிகப்பிரம்மாண்டமான படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் பாடல்களுக்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை அனிருத் அமைத்துள்ளார்.

இப்படத்தை தீபாவளி ரேசில் களமிறக்க படக்குழு எண்ணியது. ஆனால் படவேலைகள் இன்னும் முடிவடையாததால் நவம்பர் 22ம் திகதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பான வர்ணா படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. இதில் நடிகர் ஆர்யா, அனுஷ்கா இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய செல்வராகவன் இனி தென்னிந்திய படங்கள்தான் உலகளவில் பேசப்படப் போகின்றன. தெலுங்கில் ராஜமௌலி, தமிழில் நான் உள்ளிட்ட பல இயக்குநர்கள், மலையாளம், கன்னடம் ஆகிய படங்களில் சிலர் என தென்னிந்திய திரையுலகை சேர்ந்தவர்கள்தான் சினிமாவை உலகளவில் கொண்டு போகப் போகிறார்கள்.

மேலும் அனுஷ்கா பற்றி பேசும்போது இப்படத்தில் நடித்துள்ள அனுஷ்கா எனக்கு தங்கச்சி மாதிரி. படப்பிடிப்பில் என் மேல் அப்படி ஒரு அக்கறை காட்டினார். என் கூடப் பிறந்த தங்கச்சிகூட இந்த அளவுக்கு என்னை கவனித்துக் கொண்டது கிடையாது என்று அவர் பேசினார்.