வவுனியாவில் உணவு வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை : ஒருவர் கைது!!

1649

 
வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள அரச வங்கிக்கு அருகேயுள்ள நடமாடும் விற்பனை நிலையத்தினை சுகாதார பிரிவினர் சுற்றிவளைத்து பரிசோதனை மேற்கொண்ட சமயத்தில் சுகாதார சீர்கேடான உணவுப் பொருட்களை விற்பனை செய்த குறித்த விற்பனை நிலையத்தின் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பரிசோதனை இன்று (20.03.2018) காலை மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் பழுதடைந்த மீன் போன்றவற்றை விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.