புதுப்படத்தில் கவர்ச்சி உடை அணிய நஸ்ரியா மறுப்பு : இயக்குனர் பாலாஜி மோகன் விளக்கம்!!

297

nasriyaநடிகை நஸ்ரியா புதுப்படங்களில் கவர்ச்சி உடை அணியமாட்டேன், கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடிக்கமாட்டேன் என்றெல்லாம் சொல்லி நிறைய நிபந்தனைகள் விதிப்பதாக செய்திகள் பரவி உள்ளன.

ஏற்கனவே நய்யாண்டி படத்தில் தனக்கு பதில் டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சிகளை அப்படத்தின் இயக்குனர் சற்குணம் படமாக்கியுள்ளதாகவும் அதை நீக்க வேண்டும் என்றும் போர்க்கொடி உயர்த்தினார். பொலிஸ் கமிஷனரிடமும் புகார் அளித்தார். பிறகு சர்ச்சை காட்சியை நீக்கியபிறகு சமரசமானார்.

இதுபோல் அவர் அடுத்து பாலாஜி மோகன் இயக்க உள்ள படத்திலும் அடாவடிகள் செய்வதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இப்படம் தமிழ், மலையாளத்தில் தயாராகிறது. கதாநாயகனாக மம்முட்டி மகன் துல்கர்சல்மான் நடிக்கிறார்.

இயக்குனர் கொடுத்த கவர்ச்சி ஆடையை அணிய நஸ்ரியா மறுத்ததாகவும், இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்கு இயக்குனர் பாலாஜிமோகன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது..

நஸ்ரியாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. இன்றுவரை எனக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருகிறார். இரண்டு நாட்கள் நஸ்ரியாவை வைத்து போட்டோ ஷுட் நடத்தினோம். தொழில் ரீதியான ஈடுபாட்டை அவரிடம் பார்க்க முடிந்தது. அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருந்தது. ஆடைகள் விஷயத்தில் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்று அவர் கூறினார்.