இடுப்பில் மடிப்பு வருகின்றதா : இதை முயற்சிசெய்து பாருங்கள்!!

619

இடுப்பில் சிலருக்கு சதைபோட்டு, மடிப்பு மடிப்பாகத் தெரியும். அதுதான் பெண்களின் உடல் ரீதியான பல பிரச்னைகளுக்கு வெளிப்படையாகத் தோன்றும் அறிகுறி என்று கூறலாம்.

இடுப்பில் கொஞ்சமாக சதை போட்டால் அது உடலின் எடை மற்றும் தொப்பை அதிகரித்து இதயம் உள்ளிட்ட பல நோய்களை சந்திக்கபோகிறோம் என்பதற்கான ஒரு அறிகுறியே.

இடுப்புப் பகுதியில் தோலுக்கு அடியில் “சப்ஜடேனியஸ்’ என்னும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காத போது, இக்கொழுப்பானது கரையாமல் அங்கேயே தங்கி விடும்.

அதனால் இடுப்புப் சதைப் பகுதி மட்டும் பெருத்து பெரிய அளவில் காணப்படும். அதிலும் சில பெண்களுக்கு, பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை அதிகரிக்கும்.

அதுவும் உலகின் மொத்த இறப்புகளில் 3-ல் ஒரு பங்கு இடுப்புச் சதை அதிகம் உள்ளவர்களுக்குத் தான் இதயநோய் சம்பந்தமான நோய் ஏற்பட்டு இறக்கின்றனர். இதற்கு முறையற்ற உணவுப் பழக்கமும் ஒரு காரணமே.

இடுப்புச் சதையைக் குறைக்க பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்

எண்ணெயில் தயாரித்த உணவுகளை எதையும் சாப்பிடக் கூடாது.

மட்டன், முட்டை மஞ்சள்கரு, வெண்ணெய் போன்ற கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

  • ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை அதிகமாக அடிக்கடி சாப்பிடக் கூடாது.
  • மது மற்றும் புகைபழக்கங்கள் வைத்துக் கொள்ள கூடாது.
    குளிர்பானங்களை அடிக்கடி அருந்தக் கூடாது.
  • நார்ச்சத்துள்ள காய்கறிகள் பழங்களை மட்டும் அதிகமாக சாப்பிடலாம்.
  • ஓட்ஸை கஞ்சி வைத்து அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.
  • உடல் உழைப்பு இல்லாதவர்கள், 45 நிமிட நடைப்பயிற்சி அவசியம்.
  • இடுப்புச்சதையை குறைக்க ஏதாவது ஒரு நடனத்தை தொடர்ந்து ஆடலாம்