வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் புகைப் பிடிப்பவர்களால் பயணிகள் அசௌகரியம்!!

646

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் புகைப்பிடிப்பவர்களால் பயணிகள் பெரிதும் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் சிகரட் உள்ளிட்ட புகைத்தல் பொருட்களை பெற்றுக்கொள்பவர்கள் அதனை அப்பேருந்து நிலையப் பகுதியில் உள்ள பொது வெளியில் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு வந்து செல்லும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என பலரும் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பேருந்து நிலையத்திற்குள் புகைத்தல் பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.