50 டொலருக்கு பரவும் மலைப்பாம்பு மசாஜ் கலாசாரம்!!

626

Snake Massageஇந்தோனேசியாவில் மலைப்பாம்பை வைத்து மசாஜ் செய்வது அதிகரித்துள்ளது. ஆசிய நாடுகளில் சுற்றுலா தலங்களில் உடலுக்கு உற்சாகம் அளிப்பதற்காக பல வகையான மசாஜ்கள் செய்யப்படுகின்றன.

அருவிகள், கடற்கரைகள் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் மையங்களில் எண்ணை தடவி மசாஜ் அளிப்பது, மண் குளியல் என பல்வேறு வகையில் சுற்றுலா பயணிகளுக்கு மசாஜ் அளிக்கின்றனர். ஆனால் இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள ஒரு மசாஜ் நிலையம் சற்று வித்தியாசமாக வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மலைப் பாம்பு மசாஜ் செய்கின்றனர்.

உடலில் மலைப் பாம்புகளை தவழ விட்டு ஒரு பெண் ஒருவர் இதமாக உடலின் பாகங்களை அழுத்துவதன் மூலமாக உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதாக அந்த நிலையம் கூறுகிறது. தற்போது இந்த மசாஜூக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பும் பெருகியுள்ளது. ஏராளமானோர் மலைப் பாம்பு மசாஜ் செய்வதற்காக இங்கு குவிகின்றனர்.

இதற்காக வாடிக்கையாளர்களிடம் 50 டொலர் கட்டணம் வசூலிக்கின்றனர். இதில் ஒருபடி முன்னேறி இஸ்ரேலில் உள்ள அழகு நிலையம் ஒன்று எலிகளை வைத்து மசாஜ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.