வவுனியாவில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் இலவச செயலமர்வு!!

934

 
வவுனியாவில் இன்று காலை 9.30 மணியளவில் ஓவியா விருந்தினர் விடுதியில் இளைஞர், யுவதிகளுக்கான நிமிர்ந்து நில் தொழில் விருத்திக்கான வழிகாட்டல் இலவச செயலமர்வு இடம்பெற்றது.

றின் பிறைற்நைஸ் அக்கடமியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இலவச செயலமர்வின் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்கள், பிரதிநிதிகளுடன் ஆரம்ப நிகழ்வினை வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா, அருட்சகோதரி மெற்றில்டா, தலைவர் டொன்போஸ்கோ சிறுவர் காப்பக இல்லம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், நெளுக்குளம் தொழில்நுட்பபயிற்சி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், கல்வியற்கல்லூரி அதிகாரி, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஆரம்பித்து வைத்தனர்.

வேப்பங்குளம் சிறுவர் அன்பகத்தின் மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்ற நிகழ்வில் பிரபல பேச்சாளர்கள் கலந்துகொண்டு இளைஞர்கள், யுவதிகளுக்கான தொழில்வழிகாட்டல் இலவச செயலமர்வினை மேற்கொண்டனர்.

நேர்முகத்தேர்வில் கலந்துகொள்வது தொடர்பாகவும், தொழிலினை எவ்வாறு அமைத்துக்கொள்வது தொடர்பாகவும் எத்தொழிலினை தெரிவு செய்வது போன்ற அறிவுரைகளை செயலமர்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு வழங்கியிருந்தனர்.