வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவராக தமிழ்மணி அகளங்கன் தெரிவு!!

511


 
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத் தலைவருக்கான தெரிவு நேற்று(24.03) காலை சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின்போதே கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பல வருடங்களாக நா.சேனாதிராசா வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத் தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலின்போது நகரசபைக்கு தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து நேற்று இடம்பெற்ற பொதுச்சபைக் கூட்டத்தின்போது புதிய தலைவராக முன்னர் உப தலைவராக செயற்பட்ட தமிழ் மணி அகளங்கன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செயலாளராக தே.அமலன், பொருளாலராக த.யசோதரன் ஆகியோர் நேற்று இடம்பெற்ற பொதுச்சபைக்கூட்டத்தின்போது தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.