தென் ஆபிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!!

581

ind vs sa

இந்திய கிரிக்கெட் அணி வரும் டிசம்பர் 2ம் திகதி தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
இதில் 3 ஒரு நாள் போட்டிகள், 2 டெஸ்ட், போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்திய அணியின் தென் ஆபிரிக்கா சுற்றுப் பயணம் தொடர்பான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.

அதில் டிசம்பர் 5ம் திகதி முதல் ஒருநாள் போட்டி ஜோஹன்ஸ்பர்க்கில் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டேர்பனில் டிசம்பர் 8ம் திகதி 2வது ஒரு நாள் போட்டியும், செஞ்சூரியனில் வரும் டிசம்பர் 11ம் திகதி 3வது ஒரு நாள் போட்டியும் நடைபெறுகிறது.

தென் ஆப்ரிக்கா லெவன் அணியுடன் டிசம்பர் 14-15இல் பயிற்சி ஆட்டம் ஆடும் இந்தியா அதன்பின் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிசம்பர் 18-22ல் ஜோகன்ஸ்பர்க்கிலும், 2வது டெஸ்ட் டிசம்பர் 26-30-ல் டர்பனிலும் நடைபெற உள்ளது.

முன்னதாக தென் ஆபிரிக்கா தன்னிச்சையாக இந்திய அணியின் சுற்றுப்பயண அறிவிப்பை வெளியிட்டதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிருப்தியை தெரிவித்திருந்தது.

இதனையடுத்து போட்டிகளின் எண்ணிக்கையை இந்தியா குறைத்துக் கொண்டது. இந்த அறிவிப்பை இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.