சொத்துக்களை பிரிப்பதில் மோதல் : பிணை முடியும் முன்பே சிறைக்கு செல்லும் சசிகலா!!

582

தனது கணவர் மறைவால் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா, சொத்துக்காக உறவினர்கள் போடும் சண்டை கடும் அதிருப்தியை ஏற்படுத்தவே மிகுந்த கவலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான நடரஜன் இறந்த பின்னர், அவரின் சொத்துக்களை பிரிப்பதில் நடராஜன் உறவினர்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிறையில் இருந்து 15 நாட்கள் பிணையில் வெளிவந்த சசிகலா தற்போது தஞ்சையில் உள்ள நடராஜனின் பூர்வீக வீட்டில் தங்கியிருக்கிறார். அங்கிருந்து தனது கணவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை அவர் முன்னின்று நடத்தி வருகிறார்

இந்நிலையில், நடராஜனுக்கு தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் பல சொத்துக்கள் இருக்கின்றன. அவைகளை பிரிப்பதில் நடராஜனின் உடன் பிறந்தவர்களுக்கும், சசிகலா தரப்பினருக்கும் ஏற்பட்ட போட்டி மோதலாக மாறியுள்ளது.

இதனால் எரிச்சல் அடைந்த சசிகலா பிணை முடிவதற்கு முன்னரே சிறைக்கு சென்றுவிடும் முடிவில் உள்ளாராம்.

சசிகலா கணவர் நடராஜனுக்கு தமிழகம் முழுதும் ஏராளமான சொத்துக்கள் உள்ளது. தற்போது அவர் மரணமடைந்து விட்டதால், அனைத்து சொத்துக்களும் சசிகலாவிற்கு வர வேண்டும் என்பதுதான் சட்டவிதி. ஆனால், இதற்கு நடராஜனின் உடன் பிறந்தோர் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை.

ஆனால், இதற்கு நடராஜனின் சகோதரர்கள் சம்மதிக்கவில்லை. ஏனெனில் சசிகலா அவரின் குடும்பத்தினரை மட்டுமே வளர்த்துவிட்டார், நமக்கு எதுவும் செய்யவில்லை என்கிற கோபம் ஏற்கனவே நடராஜன் உடன்பிறந்தோர் குடும்பத்தினருக்கு இருப்பதாக தெரிகிறது.

அதனால் நடராஜன் வாங்கியுள்ள சொத்துக்களை சசிகலா தரப்பிற்கு கொடுக்க மாட்டோம் என அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

நடராசனுக்கு மைத்துனர் என்கிற முறையில், சசிகலாவின் சகோதரர் திவாகரனை எந்த சடங்கும் செய்ய விடாமல் நடராஜன் குடும்பத்தினரே செய்து விட்டார்கள்.

ஏனெனில், கொள்ளி வைப்பவருக்கே சொத்துக்கள் சொந்தம், அதை நடராஜனின் சகோதரர் மகனே செய்து விட்டார்.

இதனால் அதிருப்தி அடைந்த சசிகலா, எனக்கு எந்த சொத்தும் வேண்டாம். நான் பிணை முடியும் முன்பே சிறைக்கு சென்று விடுகிறேன் என கோபாமாக பேசியுள்ளார்.

பிணை முடியும் முன்பே சிறைக்கு சென்று விடுகிறேன் என்று சசிகலா கூறியுள்ளது மன்னார்குடி குடும்ப உறவினர்களிடயே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.