மத்தியபிரதேசத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் பணியில் இருந்த போது நடைபெற்ற தாக்குதலால் உடல்நிலை மோசமடைந்தும் போதிய நிதியுதவி அரசாங்கத்தால் இன்றுவரை வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.
மொரேனா பகுதியைச் சேர்ந்த மனோஜ் தோமர் என்பவர், மத்திய ரிசர்வ் போலிஸ் படையில் கமாண்டோவாக பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சண்டிகர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 11 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலில் மனோஜ்ஜின் வயிற்றில் 7 குண்டுகள் பாய்ந்தன.
வயிற்றில் இருந்த குண்டுகள் வெளியில் எடுக்கப்பட்டாலும், தோமரின் வயிற்றுக்கு வெளியே தொங்கிக்கொண்டிருக்கும் பெருங்குடல் பாலிதீன் கவரால் கட்டப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகிறார்.
எனது ஒரு கண்ணில் பார்வை பறிபோய்விட்டது. நாட்டுக்காக 16 ஆண்டுகள் சேவை செய்த எனக்கே இந்த நிலைமை என்றால் என்ன செய்வது என தோமர் வேதனை தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் தன் தொகுதி நிதியில் இருந்து ரூ.5 லட்சம் தருவதாக கூறியிருந்தாலும், அது எனக்கு இன்னமும் கிடைக்கவில்லை. தனக்கு நிதியுதவி கிடைத்தாலும் அது போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளார்.






