வவுனியா இரண்டாம் குறுக்கு தெரு வீதியில் அமைந்துள்ள தனியார் காப்புறுதி நிறுவனத்தில் நேற்று (26.03.2018) இரவு கண்ணாடியுடைத்து திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை அச்சுருத்தும் வகையில் அங்கிருந்த உத்தியோகத்தர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனையடுத்து ஏன் புகைப்படம் எடுக்கின்றீர்கள் என ஊடகவியலாளர் கேட்டபோது தலைமைக் காரியாலயத்தினால் யார் வந்தது என கேட்டார்கள் அதனால் புகைப்படம் எடுத்தேன் எனத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர் தெரிவிக்கையில்..
நான் அங்கு சென்று நடந்தவற்றை வினவிய போது அவர் தற்போது புகைப்படம் எடுக்க முடியாது எனத் தெரிவித்தார். இதனையடுத்து நான் வெளியேற முற்பட்ட சமயத்திலிலேயே என்னை புகைப்படம் எடுத்தார்.
என்னை நான் ஊடகவியலாளர் என அடையாளபடுத்தியிருந்தேன். சந்தேகம் இருந்தால் எனது அடையாள அட்டையினை காண்பிக்குமாறு கேட்டிருக்கலாம். ஆனால் அவரின் செயற்பாடு என்னை அச்சுருத்தும் வகையில் அமைந்துள்ளது எனத்தெரிவித்தார்.






