இலங்கை வந்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிக்கு நேர்ந்த பரிதாப நிலை!!

742

வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அபுதாபியில் இருந்து இலங்கை வந்த பெண்ணே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் எல்ல பிரதேச ஹோட்டலின் சமையல்காரர் ஒருவர் எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரினால் ஓட்டி சென்ற முச்சக்கர வண்டியை நிறுத்திய பெண், அதே முச்சக்கர வண்டிக்குள் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து தப்பிய பெண் ஹோட்டலுக்கு ஓடிச் சென்றுள்ளார். அங்கிருந்து மேலும் சில வெளிநாட்டவர்களுடன் சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளார்.

அதற்கமைய கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரவளையை சேர்ந்த 28 வயதுடைய ஒருவராகும். ஹோட்டலுக்கு சொந்தமான முச்சக்கர வண்டியை அனுமதியின்றி கொண்டு சென்று இவ்வாறு துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.