இறந்தபின் குழந்தை பெற்ற பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!!

725


 
இத்தாலியின் Imola நகரில் அபூர்வ கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. மிக பத்திரமாக புதையுண்டிருந்த ஒரு பெண்ணின் கால்களுக்கிடையில் ஒரு குழந்தையின் எலும்புகள் காணப்பட்டன.

அந்த எலும்புக்கூடு எப்படி அங்கு வந்தது? அது யாருடைய எலும்புக்கூடு? அந்தப் பெண் இறந்த பின் அந்தக் குழந்தை வெளியேறியதா? அப்படியானால் அந்தப் பெண் இறந்த பிறகும் அந்தக் குழந்தை உயிருடன் இருந்ததா?



இறந்தபின் அந்தப் பெண் தானாக பிரசவித்தாளா? என பல கேள்விகள் எழுந்துள்ளன. அது மட்டுமின்றி அந்தப் பெண்ணின் தலையில் ஒரு துளை காணப்பட்டது. அது அவள் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட துளை அல்ல. medieval எனப்படும் இடைக்காலத்தில் அவ்வாறு துளையிடுதல் ஒரு சிகிச்சையாக விளங்கியது.

மன நலம் பாதிக்கப்பட்டோர் முதல், கர்ப்பிணிப்பெண்கள் வரை இந்த சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
அப்படியானால் இந்த உடல் இடைக்காலத்தைச் சேர்ந்தது. அந்த காலத்திலேயே Neurosurgery எனப்படும் நரம்பியல் அறுவை சிகிச்சை அல்லதுமூளை அறுவை சிகிச்சை நடைபெற்றதற்கு இது ஒரு சான்று.



நவ யுகத்தில் கர்ப்பிணிப்பெண்கள் சிலருக்கு ஏற்படும் ஒரு பிரச்சினை Eclampsia.கர்ப்ப காலத்தின் 20 ஆவது வாரத்திற்குப்பின் கர்ப்பிணிகளைத் தாக்கும் இந்நோய்பல கர்ப்பிணிகளின் உயிரைக் குடித்திருக்கிறது.



இந்நோய் இடைக்காலத்திலேயே இருந்திருக்கிறது என்பதற்கும் அதற்கு சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கும் இந்த கண்டுபிடிப்பு ஒரு சான்று.


அந்த காயம் ஆறத் தொடங்குவதன் அறிகுறிகள் தெரிவதிலிருந்து அறுவை சிகிச்சைக்குப் பின் ஒரு வாரமாவது அவள் உயிருடன் இருந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அவள் 38 வார கர்ப்பிணியாக இருந்திருக்க வேண்டும். தாயும் சேயும் இறந்திருந்தாலும் புதைக்கப்பட்டபின் அவளது உடல் அவளது குழந்தையின் உடலை வெளியே தள்ளியிருக்க வேண்டும்.


அவளுக்கு எதற்காக இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது தெளிவாக தெரியாவிட்டாலும் கர்ப்பகால வலிப்பு நோயிலிருந்து அவளை குணமாக்குவதற்காகவே அது செய்யப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அவள் எப்படி இறந்தாள் என்று உறுதியாகக் கூற இயலவில்லை. அவள் கர்ப்பகால பிரச்சினைகளாலோ அல்லது அந்த அறுவை சிகிச்சை காரணமாகவோ கூட இறந்திருக்கலாம்.

எப்படியானாலும் trepanation மற்றும் சவப்பெட்டிக்குள் பிரசவம் ஆகிய அரிய நிகழ்வுகள் ஆகிய இரண்டையும் ஒரே கண்டுபிடிப்பில் காண்பது அபூர்வம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆவணப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகளில் இடைக்காலத்தில் ஐரோப்பாவில் trepanation மற்றும் கர்ப்பிணிப்பெண்ணின் கண்டுபிடிப்பு ஆகியவை சேர்ந்து கிடைத்தது மிக சிலவாகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.