எம்.பி.யான பின்னர் குட்டைப் பாவாடையில் டூயட் ஆட முடியுமா : ரம்யா!!

283

ramyaபாராளுமன்ற எம்.பி. யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். ரம்யா தமிழில் குத்து, வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். இதையடத்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். அவர் கடைசியாக நடித்த நீர்டோஸ் என்ற கன்னட படம் பாதியில் நிற்கிறது.

இந்த படத்தின் தயாரிப்பாளரும், கதநாயாகனுமான ஜெகதீஷ் தனக்கு நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக ரம்யாவை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, எம்.பி.யாகி விட்டதால் ரம்யா நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அவர் என் படத்தில் நடிக்க மறுப்பது தவறு. அவர் விலகுவதாக இருந்தால் படத்துக்கு இதுவரை செலவிட்ட 4 கோடியை திருப்பி தர வேண்டும் என்றார். இதற்கு ரம்யா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது..

மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிளயுள்ளனர். எனவே சினிமாவில் என்னால் இனிமேல் நடிக்க முடியாது. அது முடிந்து விட்டது. மீண்டும் நடிக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை.

அரசியலுக்கு சென்ற வேறு பல நடிகைகள் மீண்டும் நடிக்கவில்லை. எம்.பி.யான பிறகு குட்டை பாவடையும், கையில்லாத ரவிக்கையும் அணிந்து கொண்டு மரத்தை சுற்றி டூயட் பாடி ஆட முடியுமா, என்னால் அப்படி செய்ய முடியாது என்று ரம்யா கூறினார்.