வவுனியாவில் இருந்து செந்தில்நாதன் மயூரன் வடமாகாணசபை அமைச்சின் இணைப்பாளராக தெரிவு!!

373

mayuranகடந்த மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பில் டெலோ சார்பில் 9ம் இலக்கத்தில் போட்டியிட்ட செந்தில்நாதன் மயூரன் 10 007 விருப்பு வாக்குகளைப் பெற்று 5ம் இடத்தைப் பெற்றுக்கொண்டபோதும் மாகாணசபைக்கு தெரிவுசெய்யப்படவில்லை.

இந்நிலையில் இவர் வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் இணைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து வவுனியா நெற் இணையத்தளம் அவருடன் தொடர்புகொண்டு கேட்டபோது பின்வருமாறு தெரிவித்தார்..

வடமாகாண சபைத் தேர்தலில் சொற்ப வாக்குகளால் வெற்றி கைநளுவியபோதும் தற்போது எனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சின் இணைப்பாளர் பதவி மூலம் இப் பிரதேச மக்களுக்கு என்னால் முடிந்தவரை சேவை செய்ய தயாராகவுள்ளேன்.

மேலும் 5 முதல் 10 பேர் கொண்ட ஓர் குழுவை அமைப்பதன் மூலம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஓர் கிராமத்திற்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளேன்.

மேலும் வன்னித் தேர்தல் தொகுதியில் டெலோ சார்பாக இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை செய்ய திட்டமிட்டுள்ளேன்.

வடமாகாண அமைச்சுக்கான நீதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பிரதேசத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை செய்யமுடியும் என்று கூறினார்.