க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : சுமார் பத்தாயிரம் பேருக்கு 9A!!

526

2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 73.05 வீத மாணவர்கள் உயர் தரத்தில் கல்வி கற்கும் தகுதியை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றிரவு பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டன.

இதன் பெறுபேறுகளுககு அமைய பெரும்பான்மையான மாணவர்கள் சித்தியடைந்து உயர் தரத்தில் கல்வி கற்கும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

நேற்றிரவு வெளியிடப்பட்ட பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 9 ஆயிரத்து 960 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

கணித பாடத்தில் 67.24 வீதமானோர் சித்தி பெற்றுள்ளதாக பரீட்சகைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணம் வேம்படி உயர் மகளிர் கல்லூரி மாணவி மிருதி சுரேஷகுமார் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதவேளை, கம்பஹா ரத்னமாலி மகளிர் கல்லூரி மாணவி கசுனி ஹங்சனா செனவிரத்ன மற்றும் சமோதி ரவிசா சுபசிங்க ஆகியோர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

பரீட்சை விடைத்தாள் மீள் திருத்தத்திற்காக பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னரும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் ஏப்ரல் 12 ஆம் திகதிக்கு முன்னரும் தமது விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்துக்கு அனுப்ப வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் ஆறு இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.