25 வருடகால பாடசாலை வரலாற்றை புரட்டிப்போட்ட இரட்டைச் சகோதரர்கள்!!

416

25வருடகால பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 9A பெற்று நாவிதன் வெளியில் இரண்டு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகள் நள்ளிரவில் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையில், சம்மாந்துறை கல்விவலயத்தில் நாவிதன்வெளிக் கோட்டத்திலுள்ள வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் இரட்டை சகோதரர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக அதிபர் சீ.பாலசிங்கன் தெரிவித்துள்ளார்.

வறுமையான பாடசாலையான வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் வேப்பையடியை சேர்ந்த திருச்செல்வம் கோபுராஜ் 9ஏ சித்தியும், திருச்செல்வம் கோபிநாத் 8 ஏ பி சித்தியும் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தின் 25வருடகால வரலாற்றில் முதற்றடவையாக 9ஏ சித்தி பெறப்பட்டுள்ளதாகவும் குறித்த பாடசாலையின் அதிபர் கூறியுள்ளார்.

இதேவேளை, நாவிதன்வெளிக்கோட்டத்தில் நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய மாணவி வன்னியசிங்கம் சாஹித்யா 9ஏ சித்திபெற்று சாதனைபடைத்துள்ளதாக அதிபர் நா.பிரபாகர் குறிப்பிட்டுள்ளார்.