வவுனியா நெடுங்கேணி மருதேடையில் குடிநீர் வழங்கும் நிலையம் திறந்து வைப்பு!!

654

 
வவுனியா வடக்கு நெடுங்கேணி மருதேடை பிரதேசத்தில் குடிநீர் வழங்கும் நிலையமொன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் செயலாளர் க.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், தியாகராஜா, மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மருதேடை மக்களின் நீண்ட நாள் பிரச்சனையாக இருந்த குடி நீர்ப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக வடமாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியத்தின் கீழ் 4.5 மில்லியன் ரூபா பெறுமதியில் இக்குடிநீர் வழங்கும் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது மருதேடை பொது விளையாட்டு கழக இளைஞர்களிற்கு வடமாகாணசபை உறுப்பினர்களினால் விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.