
வவுனியா தமிழ் மாமன்றத்தின் இலக்கிய பணியின் ஒருபகுதியாக அனைத்து பாடசாலைகளிலும் விவாதப் பயிலரங்குகள் சிறப்பாக நடாத்தப்பட்டன.
இந்நிலையில் தமிழ் மாமன்றம் பாடசாலை மாணவர்களின் விவாதத் திறனை மேலும் வளர்க்கும் முகமாக பாடசாலை மட்டத்தில் “வன்னியின் வாதச் சமர் 2013” என்னும் நிகழ்வை நாடாத்தவுள்ளது.
இன் நிகழ்வானது இம் மாதம் 3ம் மற்றும் 9ம் திகதிகளில் காலை 8.30 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
இன் நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாடுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.





