பாரதி தமிழ் வித்தியாலயத்தில் இருந்து புராதன நாணயங்கள் மீட்பு!!

578

coinவத்தேகம பாரதி தமிழ் வித்தியாலயத்தில் இடிந்து விழுந்த மண்ணை வெட்டி அகற்றியபோது அதில் இருந்து புராதன நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வத்தேகம பகுதியில் இந்நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மழை காரணமாக வத்தேகம பாரதி தமிழ் வித்தியாலயத்தின் வளாகத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் உதவியுடன் மண்ணை வெட்டி அகற்ற பாடசாலை அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்போது மண்ணுக்குள் இருந்து புராதன நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.

1870ம் வருடத்திற்குச் சொந்தமான 23 நாணயங்கள்
1893ம் வருடத்திற்குச் சொந்தமான 05 சதம் 11 நாணயங்கள்
1892ம் வருடத்திற்குச் சொந்தமான 05 சதம் 52 நாணயங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இவை கண்டி தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.